முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் ஊக்குவித்தல் தொழில் முனைவோர் கருத்தரங்கு கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் ஊக்குவித்தல் தொடர்பான கருத்தரங்கு வருகிற ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக சுயதொழில் நடத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் முனைவோர் கருத்தரங்கு வருகிற 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள் அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சுயதொழில் மற்றும் கடன் உதவித் திட்டங்கள் பற்றி விளக்குவார்கள். மேலும், சுயவேலைவாய்ப்பு மூலம் தொழில் செய்ய விருப்பம் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.