முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பற்றி இங்குக் காணலாம்.

இந்த வருடம் இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சந்தைக்கு புதிதாக வந்த ஆட்டோ மற்றும் பவர் நிறுவனங்களின் பங்குகளை விலைக் குறையும் போது வாங்கி அதனை அதிக விலைக்கு விற்றுள்ளது.

அதனால் வங்கியின் நிதிப்பங்குகளின் (AUM) நிலையை பாதித்துள்ளது என்ற தரவுகள் காட்டியுள்ளது. பிப்ரவரி 28, 2022 இன் நிலவரப்படி எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் கடன் உட்பட மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 6,51038.30 கோடியாக உள்ளது.

இந்த மாதம் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் வாங்கிய பங்குகளில் ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கியும் அடங்கும். ஜனவரி 31 இல் 18,70,95,891 பங்குகளளை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் வைத்திருந்தது. பிப்ரவரி 28 நிலவரப்படி எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஃபவுஸ் 19,33,83,903 ஹெச்டிஎஃப்சி வங்கிப் பங்குகளை வைத்திருந்தது.

எடில்வெஸின் (Edelweiss) அறிக்கையின்படி, அதன் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் ரூ.896.89 கோடி மதிப்புள்ள HDFC பங்குகளை வாங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பிப்ரவரி 28 நிலவரப்படி, எஸ்பிஐ எம்எஃப் நிறுவனம் ரூ.27,583.34 கோடி மதிப்புள்ள ஹெச்டிஎஃப்சி வங்கிப் பங்குகளை வைத்துள்ளது.

மேலும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் 794.19 கோடி மதிப்புள்ள மான்யவரின் 89,01,519 பங்குகளை வாங்கியதாக அதே அறிக்கை தெரிவித்துள்ளது. அந்தப் பங்குகள் பிப்ரவரி 16 அன்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஃபண்ட் ஹவுஸ் வாங்கிய சில பங்குகளின் பட்டியல்களை எடெல்வீஸ் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஃபண்ட் ஹவுஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகளையும் வாங்கியுள்ளது.

ஆயில்-டு டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், தங்கக் கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா ஆகியவற்றின் பங்குகளையும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் கொள்முதல் பட்டியலில் இருக்கின்றன.

அதேசமயம் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் பாரத் எலக்ட்ரான் (ரூ. 305 கோடி), நைக்கா (ரூ. 259.80 கோடி), டாடா மோட்டார்ஸ் (ரூ. 256.58 கோடி), ஏபிபி (ரூ. 188 கோடி) மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் (ரூ. 105.72 கோடி) பங்குகளையும் விற்றுள்ளது.

மேற்ச்சொன்ன தரவுகளின்படி எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்தான் அதிக அளவிலான முதன்மை நிறுவனக்களின் பங்குகளை வாங்கி சந்தையின் நிலைக்கேற்ப வற்றை விற்ரு லாபம் பார்த்த நிறுவனமாக உள்ளது.