உலக அரங்கில் ஜி20 நாடுகளின் போக்கு குறித்த ஆய்வறிக்கையை சர்வதேச தொழில் ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், வரும் 2030-ம் ஆண்டில், உலக அளவில் வேலைவாய்ப்பில் பங்கேற்கும் வயதைக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய மூன்று ஜி20 நாடுகளில் அதிகமாக இருக்கும். ஜி20 நாடுகளின் வளர்ச்சியில் சீனாவும், இந்தியாவும் இன்ஜின்களாக இருக்கும்.
தனி நபர் பொருளாதார மேம்பாட்டில், ஜி20 நாடுகளின் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சற்று பின்தங்கி உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 107 கோடி மக்கள் பொருளாதார மேம்பாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஜி20 நாடுகள் தன் நாட்டு மக்களின் பொருளாதார நிலையை வளர்ந்த நாடுகளுக்கு நிகராக மேம்படுத்துவதற்கு நிறைய செலவிட வேண்டும். அதன்படி, 2030-ஆண்டு வரையில் 21 டிரில்லியன் டாலர் செலவிட வேண்டும். இந்தியா 5.4 டிரில்லியன் டாலரும் சீனா 8 டிரில்லியன் டாலரும் செலவிட வேண்டும்.