இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
இந்தியா, இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக துவங்கி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயஸ் ஐயர் தயவால் (92) 252 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியை ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் திணறடித்ததால், 109 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 49 (79), ஹனுமா விஹாரி 35 (79) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அரை சதம் கூட எடுக்கவில்லை.
அதன்பிறகு, பிட்ச் முழுக்க முழுக்க சுழலுக்கு சாதகமாக ஒத்துழைப்பு தர ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ரிஷப் பந்த் பந்துகளை இறங்கி வந்து அடிக்க ஆரம்பித்து வெறும் 28 பந்துகளில் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் பெற்ற ஷ்ரேயஸ் ஐயர் அபாரமாக விளையாடி 67 (87) ரன்களை குவித்தார். மற்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், இந்திய 303/ ரன்கள் மட்டும் சேர்த்து, இலங்கைக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தனர்.