நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி போராடி தோற்றது.
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் குரூப் ஏ பிரிவில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை, தெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை தோற்றால், வெளியேற்றப்படும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர் குஷல் மெண்டிஸ் அபாரமாக செயல்பட்டு 79 (44) ரன்களை குவித்த நிலையில், அடுத்து அசலங்கா 31 (30), ராஜபக்சா 19 (13) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். நிஷங்கா 14 (21), தனஞ்ஜெயா டி சில்வா 0 (1), ஷனகா 8 (5) போன்றவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், இலங்கை அணி 20 ஓவர்களில் 162/6 ரன்களை மட்டும் சேர்த்தது.
நெதர்லாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் ஓபனர் மாக் ஓடவ்டை தவிர மற்ற யாருமே சிறப்பாக செயல்படவில்லை. பாஸ் டீ லீட் 14 (10), அனுபவம் வாய்ந்த பேட்டர் டாம் கூப்பர் 16 (19), கேப்டன் எட்வர்ட்ஸ் 21 (16) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
நெதர்லாந்து ஓபனர் அபாரம்:
இருப்பினும், மறுமுனையில் ஓபனர் ஓடவ்ட் தொடர்ந்து பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டார். இவர் கடைசிவரை களத்தில் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. குறிப்பாக 18ஆவது ஓவரில் பெர்ணான்டோவுக்கு எதிராக ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி, 19ஆவது ஓவரில் தீக்ஷனாவுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை அடித்து, ஆட்டத்தை உயிர்புடன் வைத்திருந்தார்.
கடைசிவரை பரபரப்பு:
இறுதியில் 6 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. ஓடவ்ட் நல்ல பார்மில் இருந்ததால், விறுவிறுப்பு அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், லகிரு குமரா ஒரு பவுண்டரியை மட்டுமே அடிக்கவிட்டார். இதனால், நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 146/9 ரன்களை மட்டும் சேர்த்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி:
இலங்கை அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளை பெற்று +0.667 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், சூப்பர் 12 சுற்றுக்கு செல்வதையும் உறுதி செய்துள்ளது. அடுத்த போட்டியில் அமீரகத்திற்கு எதிராக நமீபியா வென்றால், சூப்பர் 12 சுற்றுக்கு அந்த அணி செல்லும். தோற்றால், நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு செல்லும். அமீரக அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது.